சென்னை அரசு பொது மருத்துவமனைக்குப் படையெடுக்கும் பாம்புகள் - அடுத்தடுத்து சிக்கியதால் நோயாளிகள் பீதி
சென்னை: சமீபகாலமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், நோயாளிகள் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர நாள்தோறும், புறநோயாளிகளாக தினமும் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.

கடந்தாண்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிசு ஒன்றின் சடலத்தை எலி கடித்ததைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் எலி, பூனை மற்றும் நாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனபோதும், தொடர்ந்து அரசு மருத்துவமனை வளாகங்களில் இவற்றின் நடமாட்டம் குறையவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நோயாளிகள் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடைந்த சேர், நாற்காலிகள் போன்றவற்றை போட்டு வைத்திருக்கும் அறைகளில் எலிகளைப் பிடிப்பதற்காக தற்போது புதிய வரவாக பாம்புகள் வந்து சேர்ந்துள்ளதாம்.
கடந்த 21ம் தேதி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுபவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் அறை அருகே, ஊழியர்கள் உடைமாற்றும் அறையில் நல்ல பாம்பு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஊழியர்கள் அந்த பாம்பை சடலமாக மீட்டனர்.
இந்நிலையில் சமையல் அறை அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் இறந்த நிலையில் இருந்த ஒரு பாம்பை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே பகுதியில் இரண்டு பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால்,வார்டுகளில் உள்ள உள்நோயாளிகள் பீதியடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, சமையல் அறை அருகில் உள்ள வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எப்போது பாம்பு வருமோ என்ற அச்சத்திலேயே நிம்மதி இழந்து காணப்படுகின்றனராம்.
யாராவது ஒரு "ஸ்னேக் பாபு"வைப் பிடித்து வந்து மிச்சம் மீதி இருக்கும் பாம்புகளைப் பிடித்து அப்புறப்படுத்தினால் நல்லது என்று நோயாளிகள் புலம்புகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications