“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்”... பின்னிப் பிணைந்து பாம்புகள் நடனமாடிய வீடியோ வைரலானது!
குன்னூர் மலைப்பாதையில் இரண்டு சாரைப் பாம்புகள் இணைந்து நடனமாடிய வீடியோக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
நீலகிரி: குன்னூர் மலைப்பாதையில் இரண்டு பாம்புகள் இணைந்து நடனமாடிய காட்சி வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவதுண்டு. அவற்றை அவ்வழியே வாகனத்தில் வருபவர்கள் நின்று ரசித்து விட்டுச் செல்வர்.
அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து நடனமாடியது.
இந்த அரிய காட்சியை அவ்வழியே வாகனங்களில் சென்றவர்கள் நின்று ஆர்வத்துடன் பார்த்தனர். சிலர் அதனை தங்களது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தனர்.
சுற்றிலும் மக்கள் நின்று வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டு கொள்ளாமல் இரண்டு பாம்புகளும் சுமார் அரை மணி நேரம் பின்னிப் பிணைந்து நடனம் ஆடியது. அப்போது இரண்டு பாம்புகளும் நிலப்பரப்பில் இருந்து சிறிது தூரம் மேலே எழுந்து நின்றது பார்ப்பதற்கு, அவை நிற்பது போல் காணப்பட்டது.
சினிமாவில் மட்டுமே பார்த்த இத்தகைய காட்சியை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததால் அந்த வழியே வாகனத்தில் வந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி













Click it and Unblock the Notifications