நமிதாவை கட்டியணைத்து சினேகன் படுத்தியபாடு.. பிக்பாஸ் பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து நமீதா வெளியேறிய போது வீட்டில் கேட் வரை நமீதாவை விடாமல் கட்டிப்பிடித்த சினேகனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து நமீதா வெளியேற்றப்பட்டது மக்களுக்கு, ஏன் சக போட்டியாளர்களுக்கெல்லாம் (உள்ளுக்குள்) சந்தோஷமான செய்தியாக இருக்கும் பட்சத்தில் சினேகன் கண் கலங்கும் அளவுக்கு நமீதாவின் பிரிவு கவிஞரை வாட்டுகிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. வெளியுலக தொடர்பே இல்லாத நிலையில் காயத்ரி, கணேஷ் டுவிட்டர் கணக்கில் இருந்து டுவீட்கள் சென்றது முதல் இன்று அன்றாடம் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்டின் படி இவர்கள் செயல்படுகிறார்கள் என்றாலும், இந்த கேம் ஷோவுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கின்றனர்.

கட்டிப்பிடிக்க ஆளில்லை
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலியானா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மக்கள் பெரிதும் விரும்பினர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாம் நாளே தன்னை கட்டிப்பிடிக்க ஆளில்லை என்று நடிகர் ஸ்ரீயிடம் ஜூலி புலம்பிய புலம்பல் மக்களை ச்சீ என சொல்லவைத்தது. இதன் பிறகு ஜூலி செய்யம் அனைத்து விஷயங்களும் சர்ச்சைக்குரியவையாகவே இருந்து வருகிறது.

அண்ணா என்று கட்டிப்பிடித்தல்
சினேகன், சக்தி உள்ளிட்டோரை அண்ணா என்று அழைத்து விட்டு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வருவது தமிழக பண்பாட்டுக்கு அழகா என்று மக்கள் முகம் சுளிக்கின்றனர். மக்களின் வறுத்தெடுப்புக்கு சினேகன், ஜூலி, காயத்ரி நமீதா ஆகியோர் உள்ளாகினர்.

நமீதா வெளியேற்றம்
ஓவியாவின் நேர்மையான குணத்தால் அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். நாமினேட் செய்யப்பட்ட மீதமுள்ள கணேஷ், நமீதா இருவரில் நமீதா நேற்று வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சினேகனும், நமீதாவும் எத்தனை முறை கட்டிப்பிடித்து கட்டிப்பிடித்து நமீதாவின் மச்சான்களை வெறுப்பேற்றினர் தெரியுமா.
Recommended Video


பெண்கள் பாதுகாப்பு
அப்பாவி பரணி இரு பெண்களுக்கு நடுவில் நுழைந்து செல்கிறார் என்று நமீதா குற்றம்சாட்டிய நிலையில், சினேகனை மட்டும் வாசல் வரை கட்டிப்பிடித்துக் கொண்டே இருப்பது எந்த வகையில் நியாயம என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மாற்றி மாற்றி...
ஒன்று கட்டிப்பிடிக்க ஆளில்லை என்று ஒருவர் புலம்புகிறார். இல்லாவிட்டால் கட்டிப்பிடித்து கட்டிப்பிடித்து இதுபோன்று நிகழ்ச்சி பார்ப்போரை முகம் சுளிக்கின்றனர். பரணியால் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய நிலையில் சினேகனை மற்றவர்கள் ,கட்டி அணைப்பதும், அவர் மற்ற பெண்களை கட்டி அணைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெட்டிசன்கள் அவரை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.நமீதாவை எலிமினேட் செய்ததற்கு கட்டிப்பிடித்து அழும் சினேகன் இதுவரை சென்ற போட்டியாளர்களுக்கு மனதளவில் வருத்தம் கூட தெரிவிக்காதது ஏன் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications