சுவாதியின் மரணத்திலும் ஜாதி சர்ச்சை.. குற்றத்தை திசை திருப்பும் சோஷியல் மீடியா சண்டைகள்
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்ட இன்போசிஸ் ஊழியரான சுவாதி குறித்து சோஷியல் மீடியாக்களில் தங்களது இஷ்டப்படியெல்லாம் வாத விவாதங்களில் மக்கள் ஈடுபடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல உள்ளது.
சுவாதி கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, கொலையாளி அவரிடம் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
சுவாதிக்கு, கொலையாளி ஏற்கனவே தெரிந்த நபர் என்று இதன் மூலம் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சுவாதி ஒருவரை காதலித்து வந்ததாகவும், கொலையாளி சுவாதியை ஒருதலையாக காதலித்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின.

பேட்டி
சென்னை ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் பகிரங்கமாகவே, சுவாதிக்கு வேறு ஒரு ஆண் நண்பர் இருந்ததாகவும், கொலையாளி நபர் யார் என்பதுதான் தெரியவில்லை என்றும், மீடியாக்களுக்கு பேட்டியே கொடுத்தார்.

சோஷியல் மீடியா
இதையெல்லாம் சோஷியல் மீடியாக்கள் விவாத பொருளாக்கியுள்ளன. சுவாதி இரு ஆண்களை காதலித்து ஏமாற்றியிருக்கலாம் என்று சிலர் கருத்து கூறும் அளவுக்கு சோஷியல் மீடியாக்களில் விஷம் கக்கப்படுகிறது.

ஜாதி சாயம்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் போன்ற ஒரு பொது இடத்தில் நடைபெற்ற குற்றம் என்பதால் மீடியாக்கள் இதற்கு முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் சோஷியல் மீடியாக்களில் ஒரு பிரிவினர், சுவாதி மேல் ஜாதி என்பதால் அவரது கொலைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தருகின்றன என்று ஜாதி சாயம் பூசி பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.

எதிர் தரப்புக்கும் அதே ஆயுதம்
இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால், சுவாதி உயர் ஜாதியை சேர்ந்தவர் என்பதாலேயே ஊடகங்கள் அவரது இமேஜை டேமேஜ் செய்ய பார்க்கின்றன என்று மற்றொரு பிரிவினரும் ஆக்ரோஷமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் கருத்து பதிவு செய்து வருகிறார்கள். இதனால் குற்றத்தின் பின்னணி, குற்றவாளி கைது, வருங்கால பாதுகாப்பு போன்ற முக்கிய விஷயங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

பேட்டி
இந்நிலையில், ஆங்கில பத்திரிகையொன்றுக்கு மட்டும் பேட்டியளிக்க சம்மதித்த சுவாதியின் தந்தை, சந்தான கோபாலகிருஷ்ணன், இதுகுறித்து அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மாண்பை குலைக்காதீர்கள்
"சுவாதியின் உயிரை யாரும் திரும்பி கொண்டுவர முடியாது எனும்போது, அவரது மாண்பை குலைத்து, பெயரை கெடுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தகவல் கொடுக்கவில்லை
சுவாதியின் குடும்பத்தார், பொதுமக்கள் மீதும், போலீசார் மீதும் மிகுந்த ஆதங்கத்தில் உள்ளனர். சுவாதியின் ஐடி கார்டு பிளாட்பாரத்தில் கிடந்தும்கூட, குடும்பத்தாருக்கு முன்கூட்டியே யாரும் தகவல் கொடுக்கவில்லை என்பது அவர்கள் ஆதங்கம்.

மெத்தனம்
கொலை காலை 6.30 மணியளவில் நடைபெற்றபோதும், காலை 8 மணியளவில்தான், சுவாதியின் தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கான்ஸ்டபிள் அவரது வீட்டுக்கு சென்று தகவல் சொல்லியுள்ளார். இது மிகவும் மெத்தன செயல் என்று அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார் சந்தான கோபாலகிருஷ்ணனின் சகோதரர் கோவிந்தராஜன்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications