அட்சய திரிதியை என்பது மோசடி வேலை: மாநில அரசு நடவடிக்கை எடுக்க தமிழ் பண்பாட்டு நடுவம் கோரிக்கை
சென்னை: அட்சய திரிதியை என்ற பெயரில் பொது மக்களிடம் மிகப் பெரிய மோசடி வேலை நடைபெறுகிறது என்று தமிழ் பண்பாட்டு நடுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழ் பண்பாட்டு நடுவம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அட்சய திரிதியை என்னும் நாளில் தங்கம் வாங்கினால் அதன் பின் வரக்கூடிய நாட்களில் செல்வம் கொழிக்கும் என்று வர்த்தக நோக்கம் கொண்ட ஆரிய இந்துக்கள் நம்மை நம்ப வைத்து இப்போது பணம் சம்பாதிக்கார்கள்.

இந்த வழக்கமும் மிகச் சமீக காலத்தில் தான் உருவானது. ஆரிய வேத மதத்திலும் இந்த நாளைப் பற்றிய விசேஷ குறிப்புகள் இருப்பதாக தெரியவில்லை என்று சோதிடர்கள் கூறுகின்றனர்.
மேலும், புராணங்களை மேற்கோள் காட்டி இந்த நாளில் தான் திரேதா யுகம் தொடங்கப்பட்ட காலம் என்றும் அதனால் இந்த நாளில் வாங்கினால் வீடுகளில் செல்வம் பெருகும் என்று கதை கட்டி விட்டனர் வியாபார நோக்குடைய ஆரிய இந்துக்கள்.
திரேதா யுகம் என்று சொல்லப்படும் காலம் உண்மையில் வரலாற்று ரீதியாக இல்லை. மேலும், ஏழை அப்பாவி மக்கள் பலரும் இந்தக் கட்டுக் கதைகளை உண்மை என்று நம்பி பல இடங்களில் கடன் வாங்கி தங்கம் வாங்குகின்றனர். இதனால் அவர்கள் பணக்காரர்கள் ஆகுவதில்லை, கடன்காரர்களாக தான் மாறுகின்றனர்.
தங்கம் வாங்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் எந்த நாளில் வேண்டுமாலும் வாங்கலாம். தங்கம் விலை குறைந்துள்ள காலத்தில் வாங்கலாம். அதில் தவறில்லை.
ஆனால் இந்த நாளில் நெரிசலில் சிக்கி நகை வியாபாரிகளின் நயவஞ்சக தந்திரங்களுக்கு ஆட்பட்டு நகை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது திட்டமிட்ட மோசடி ஆகும். இதை கண்டிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், இது பொய் என்று மக்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு இந்து மத, தமிழர் மதத் தலைவர்களுக்கும் உள்ளது. எனினும் அவ்வாறு இவர்கள் செய்வதில்லை என்பது தான் வேதனை.
உண்மையில் தமிழர் பண்பாட்டில் இப்படியான தினத்தை நாம் என்றுமே கொண்டாடியது இல்லை. அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலும் இல்லை. தமிழர் வரலாற்றில் இது குறித்து பேசப்பட்டதும் இல்லை. இதை வடநாட்டு ஆரிய இந்துக்கள் திட்டமிட்டு தமிழர்கள் மீது திணித்துவிட்டனர். எனவே, பொது மக்கள் தங்களது நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் இந்த நாளை புறக்கணிக்க வேண்டும்.
மேலும், அட்சய திரிதியை என்ற பெயிரில் வெளியாகும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், மற்றும் நகைகள் வாங்க தூண்டும் மோசடி செயல்களை இனி வரும் காலத்திலாவது தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி மக்களை வணிக ரீதியிலான கொள்ளையர்களிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்றும், பொது மக்கள் விழிப்புணர்வு அடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications