பெற்ற மகனே தாயைக் குத்திக் கொலை செய்த கொடுமை...!
கரூர்: கரூரில் பெற்ற மகனே தாயை குத்தி கொலை செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் கைலாசபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, இவரது மணைவி கௌசல்யா (46). சம்பவத்தன்று கௌசல்யா கோயம்புத்தூரில் உள்ள உறவினர் இறந்து போன வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றார். பின்னர் தாமதமாக வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த இவரது மகன் சித்தார்தன் (27), ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய் என்று கேட்டு தாயுடன் தகராறு செய்துள்ளார். இதனால் தாய், மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த சித்தார்தன் களைகொத்தி எனப்படும் இரும்பு கம்பியால் தன் தாயை பலமாக தாக்கி உள்ளார். மகனிடமிருந்து உயர்பிழைக்க தப்பி ஓடினார் கௌசல்யா, இருந்தபோதிலும் விடாமல் விரட்டி சென்று தன் தாயை குத்தி செய்தார் சித்தார்தன்.

தகவலறிந்து வந்த சின்னதாராபுரம் போலீசார் சித்தார்தனை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சித்தார்தன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், பெற்று வளர்த்த தாயை கொலை செய்த சித்தார்தன், எங்கோ வெறித்து பார்த்தபடி இருந்ததை கண்ட உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை நெகிழ செய்தது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications