காணாமல் போன குடம்... மாமியாரை கொன்ற மருமகன்... ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு அருகே தண்ணீர் குடம் காணாமல் போனது தொடர்பாக கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது அரிவாள்மனை உடைந்து விழுந்ததால் மனைவியின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு: ஈரோடு அருகே தண்ணீர் 2குடம் காணாமல் போனது தொடர்பாக கணவன் மனைவியிடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை தாக்க எடுத்த அரிவாள் மனை அருகில் படுத்திருந்த மனைவியின் தாயார் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி நந்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி உள்ளார். 58 வயதான ராமசாமி கூலித்தொழிலாளியாக உள்ளார்.

இந்நிலையில் சவுந்தரத்தின் மனைவி நேற்று தெருவில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது குடம் காணாமல் போயுள்ளது.
இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே நேற்றிரவி கடுமையான சண்டை நடைபெற்றுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராமசாமி, தனது மனைவியின் தலையில் அரிவாள் மனையால் ஓங்கி அடித்துள்ளார்.
பதம் பார்த்த அரிவாள்மனை
அப்போது அரிவாள் மனை இரண்டாக உடைந்து வீட்டில் படுத்திருந்த சவுந்தரத்தின் தாயார் பெரியம்மா தலையில் விழுந்து பதம் பார்ததது. இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
தீவிர சிகிச்சை
இதையடுத்து காயமடைந்த பெரியம்மா ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
மாமியார் பலி
இருப்பினும் சிகிச்சைப்பலனின்றி பெரியம்மா உயிரிழந்தார். இதையடுத்து மாமியார் கொலைக்கு காரணமான மருமகன் ராமசாமி கைது செய்யப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications