வாசனைப் பற்றி சோனியா கேட்கவே இல்லை.... போட்டுத்தாக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறியது குறித்து சோனியா காந்தி எதுவும் விசாரிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்ட பின்னர், டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியை, அவரது இல்லத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சந்தித்து பேசினார். காங்கிரசில் இருந்து வாசன் விலகி உள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ''தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்'' என சோனியா அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. சோனியாவுடனான சந்திப்பின்போது, ப.சிதம்பரம், குமரி அனந்தன், திருநாவுக்கரசர் மற்றும் வசந்தகுமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''தமிழகத்தில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் வலியுறுத்தினோம். காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் விலகியதால் கவலைப்பட வேண்டாம் எனவும் சோனியாவிடம் கூறினோம்.
ஜி.கே.வாசன் குறித்து சோனியா காந்தி எதுவும் விசாரிக்கவில்லை. மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications