இனி மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர் ”போட்டோ” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர்களின் விவரங்களுடன் புகைப்படத்தை வைக்க தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஒரே பெயர் கொண்ட பலர் போட்டியிடும் போது வாக்காளர்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதன்படி வரும் மே மாதம் 1 ஆம் தேதிக்கு பிறகு நடக்கும் தேர்தல்களில் மின்னணு இயந்திரத்தில் பொருத்தப்படும் வாக்குச் சீட்டுகள், சாதாரண வாக்குச் சீட்டுகள் மற்றும் தபால் வாக்குச் சீட்டுகளில் வழக்கமான விவரங்களுடன் வேட்பாளர்களின் புகைப்படமும் இடம் பெறும்.

Soon, voting machines will have candidate photos

எனவே வேட்பாளர்கள் தங்களது அண்மைக்கால புகைப்படத்தை வேட்பு மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த புகைப்படம் 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் புகைப்படம் கொடுக்காத காரணத்திற்காக வேட்புமனு தள்‌ளுபடி செய்யப்பட மாட்டாது என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி‌ சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+