தென் தமிழகத்தில் கொஞ்சம் மழை பெய்யுமாம்.. மற்ற இடங்களில் வெயில்தானாம்.. வானிலை மையம்
தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் வறண்ட நிலையே காணப்படும் என்றும் அது அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக பனி இருந்த நிலையில், தற்போது படிப்படியாக பனி குறைந்து வெயில் அடிக்க தொடங்கிவிட்டது. மழை முற்றிலுமாக நின்றுவிட்ட நிலையில், தற்போது தென் தமிழகத்தில் லேசாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கடலோரத்தில் லேசான காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் தென் மாவட்டங்களில் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தென் தமிழகங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications