Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மீண்டும் பட்டையை கிளப்ப போகிறது பருவமழை.. தமிழ்நாடு வானிலை!

தென் தமிழகம் முதல் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் இரண்டாவது முறையாக பருவமழை பட்டையை கிளப்பப்போவதாக தனியார் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு!..வீடியோ

    சென்னை: தென் தமிழகம் முதல் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் இரண்டாவது முறையாக பருவமழை பட்டையை கிளப்பப்போவதாக தனியார் வானிலை அமைப்பான தமிழ்நாடு வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் இதுவரை வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகின. அவற்றில் முதலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை உட்பட கடலோரை மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    ஆனால் இரண்டாவதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பெய்ய வேண்டி பெரும்பாலான மழை கடலிலேயே பெய்துவிட்டது.

    வறண்ட வானிலை..

    பின்னர் வடதிசையில் நகர்ந்து ஒடிசாவில் கரையை கடந்தது இந்த காற்றழுத்த தாழ்வுநிலை. இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஓய்ந்து கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. வெப்பசலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்தது.

    இரண்டாவது முறையாக..

    இந்நிலையில் வங்கக்கடலில் தற்போது மூன்றாவதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் தென் தமிழகம் முதல் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் இரண்டாவது முறையாக நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வானிலை என்ற அமைப்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    ஓரளவுக்கு ஒரே மாதிரியாக..

    உள் மாவட்டங்களும் ஓரளவுக்கு நல்ல மழையை பெற போவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும் வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு நிலையங்கள் முதலில் இரு வேறாக காண்பித்தன என்றும் இப்போது ஓரளவுக்கு ஒரே மாதிரியாக நல்ல மழை என்று சொல்கின்றன என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

    நல்ல மழை கிடைக்க சாத்தியம்

    மேலும் தமிழகத்தில் உள்ள மழை வாய்ப்புக் குறித்து இரு வெளிநாட்டு வானிலை முன்னறிவிப்பு நிலையங்கள் அளித்துள்ள நான்கு புகைப்படங்களையும் தமிழ்நாடு வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழக கடல் பகுதியில் எம்ஜேஓ எனும் கடல்-வளிமண்டல நிகழ்வு இருப்பதால் தமிழகம் முழுவதும் நல்ல மழை கிடைக்க சாத்தியம் உள்ளது என்றும் தமிழ்நாடு வானிலை என்ற தனியார் அமைப்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+