Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிலுஜிலுவென அந்தமானில் ஆரம்பித்தது தென்மேற்கு பருவமழை ... கேரளாவில் மே 28ல் தொடங்கும்

டெல்லி: அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கேரளாவில் முன்கூட்டியே மழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்கு பருவமழை காலமாகும். ஆண்டு தோறும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மே மாதம் 17ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அது 3 நாட்களுக்கு முன்னதாக நேற்றே தொடங்கியுள்ளது. கேரளாவில் வரும் 28ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. இந்த ஆண்டாவது மேட்டூர் அணை நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கும். இந்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டும். பாபநாசம், மேற்கு தொடர்ச்சி மலைகளில் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். தென் மாவட்டத்தில் உள்ள பல அணைகளில் நீர் மட்டம் உயரும்.

வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையிலும் நீடிக்கும். தென்மேற்கு பருவமழையானது கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி பின்னர் வடஇந்தியா முழுவதும் பரவும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும்.

 வாட்டிய வறட்சி

வாட்டிய வறட்சி

கடந்தாண்டு தென்மேற்கு பருவ மழை ஜூன் 8ஆம் தேதி தொடங்கியது. ஆனால், சராசரிக்கும் குறைவாகவே பெய்ததால் வட மாநிலங்களில் வறட்சி ஏற்பட்டது. தற்போது, கோடை வெயில் உக்கிரத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடைமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் ஓரளவுக்குத் தணிந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு பருவமழை முன்னேறியது. இன்று முதல் 2 நாளுக்கு அந்தமான், நிகோபாரில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நிகோபார் தீவுக் கடலுக்கு மீனவர்கள் இன்றும், நாளையும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது. அந்தமான் தீவு கடலுக்கு மே 15 முதல் 17 வரை மீன் பிடிக்க செல்லக் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 மே 28ல் கேரளாவில் தொடங்கும்

மே 28ல் கேரளாவில் தொடங்கும்

அந்தமானில் மழை பெய்ய துவங்கி 2 வாரங்களுக்குள் கேரளா பருவ மழையை சந்திக்கும். எனவே இந்த மாதம் 28 அல்லது 29 தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழியத் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 நிரம்பும் அணைகள்

நிரம்பும் அணைகள்

தென்மேற்கு பருவமழை அதிகரிக்கும்பட்சத்தில் கர்நாடகா, கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து, தமிழக அணைகளுக்கும் போதிய நீர் கிடைத்து அவைகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக முக்கிய பாசன அணையான மேட்டூர் அணைக்குத் தென்மேற்கு பருவமழையின் போதுதான் நீர்வரத்து அதிகம் இருக்கும்.

 மழை தீவிரமடையும்

மழை தீவிரமடையும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள மழை அரபிக்கடலின் கேரளா பகுதியை இரண்டு வாரங்களில் சென்றடைந்து மழை தீவிரம் அடையும். மேலும், வருடாந்திர சராசரி அளவான 86 சதவிகித மழையளவை விட, இந்தாண்டு அதிக அளவு மழையாக 96 சதவிகிதம் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் இந்தத் தகவலால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 மேட்டூர் அணை நிரம்புமா?

மேட்டூர் அணை நிரம்புமா?

கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர் மட்டம் 90 அடியை கூட எட்டவில்லை. ஆகஸ்ட் மாதம்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது. தென்மேற்கு பருவமழை கை கொடுத் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தால் மட்டுமே ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். இந்த ஆண்டாவது மேட்டூர் அணை நிரம்ப வேண்டும் என்பது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேண்டுதலாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+