ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள்- தென் மாவட்ட ரயில்கள் 3 மணி நேரம் தாமதம்!
திருச்சி: திருச்சியில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகின்ற அனைத்து ரயில்களும் 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.
திருச்சி ரயில் நிலையத்தில் நேற்றிரவு ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்தன. பயணிகள் கூச்சல் போட்டதையடுத்து எஞ்சின் டிரைவர் உஷாராகி ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரக்கூடிய அனைத்து ரயில்களும் திருச்சி ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டன. சிக்னல் மற்றும் பாயிண்ட் கோளாறால் ஏற்பட்ட விபத்து காரணமாக 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த ரயில்கள் வழியில் நின்றன.
அதிகாலை 1.30 மணிக்கு பின்னர் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு வந்தன.
இதனால் நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பொதிகை உள்ளிட்ட அனைத்து ரயில்களும் இன்று தாமதமாக வந்து சேர்ந்தன. மலைக்கோட்டை மங்களூர், பாண்டியன் எக்ஸ்பிரஸ்கள் மட்டுமே வழக்கமான நேரத்திற்கு எழும்பூருக்கு வந்தன. மற்ற ரயில்கள் அனைத்தும் காலை 9.30 மணிக்கு மேல் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.
பயணிகள் மேலும்கடும் குளிரில் அவதிப்பட்டனர். அனந்தபுரி, ராமேஸ்வரம் ரயில்கள் 11 மணிக்கும், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பகல் 1 மணி அளவிலும் வந்தன. தென் மாவட்ட ரயில்கள் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்ததால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளை அழைத்து செல்ல வந்த உறவினர்களும் காத்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications