மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் அத்துமீறி பயணம்: 22 பயணிகளிடம் தலா ரூ.400 அபராதம் வசூல்
சென்னை: ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் பெட்டிகளில் ஆர்.பி.எப். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அதில் அத்துமீறி பயணம் செய்த 22 பயணிகள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து தலா ரூ. 400 அபராதம் வசூலிக்கப் பட்டது.
அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காக மாற்றுத் திறனாளிகள் பெட்டியை அமைத்துள்ளது ரயில்வே நிர்வாகம். ஆனால், அதில் சிலர் அத்துமீறி பயணம் செய்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இடையூறு செய்வதாக சென்னை செண்டிரல் ரயில் நிலைய பாதுகாப்புப் படை ( ஆர்.பி.எப். ) போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வருவதுண்டு. அதன்படி, மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் திடீர் சோதனை நடத்தி, அத்துமீறி பயணம் மேற்கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது.

அந்தவகையில், நேற்று சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ஜி.டி.எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஆர்.பி.எப். போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் 22 பயணிகள், அத்துமீறி பயணம் செய்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் தலா ரூ.400 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர்கள் அழகர்சாமி, திலீப் ஆகியோர் கூறுகையில், ‘‘சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களில் இதுபோன்ற எந்த அத்துமீறிய பயணங்கள் நிகழ்வதில்லை. வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் இனி தொடர் சோதனைகள் நடத்தப்படும்'', என்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications