கூட்ட நெரிசலை தவிர்க்க.. சென்னை - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 9-ம் தேதி இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும் சென்னை எழும்பூர்- நெல்லை 'சுவிதா' சிறப்பு ரயில் (வண்டிஎண்:82601) மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து செப்டம்பர் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் 'சுவிதா' சிறப்பு ரயில் (82602) மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

Southern Railway to operate special trains from Chennai to Tirunelveli

எர்ணாகுளம் சிறப்பு ரயில்:

இதேபோல் சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 9-ம் தேதி இரவு 10.30 மணிக்கு எர்ணாகுளம் நோக்கி 'சுவிதா' அதிவிரைவு சிறப்பு ரயில்(82621) மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் 'சுவிதா' அதி விரைவு ரயில் (82622) மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+