சென்னை-நெல்லை இடையே தஞ்சை, விருதாச்சலம் வழியாக இரு சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை-திருநெல்வேலி நடுவே, தஞ்சாவூர் மற்றும் விருதாச்சலம் வழியாக இருவேறு சிறப்பு ரயில்களை இருமார்க்கத்திலும் இயக்குவதாக அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

- இதுகுறித்த செய்திக்குறிப்பு: நெல்லை-சென்னை எழும்பூர் சூப்பர் பார்ஸ்ட் சிறப்பு ரயில் (06702), செப்டம்பர் 14ம்தேதி ஞாயிற்றுக்கிழமை நெல்லையில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு எக்மோர் வந்தடையும்.
- சென்னை எக்மோர்-நெல்லை சிறப்பு ரயில் (06701) செப்டம்பர் 15ம்தேதி திங்கள் இரவு 10.45 மணிக்கு எழும்பூரிலிருந்து கிளம்பி மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
- இந்த சிறப்பு ரயில்கள் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நெல்லை-சென்னை எக்ஸ்பிரஸ், மாம்பலம் ரயில் நிலையத்திலும் நிற்கும்.
- இதேபோன்று விருதாச்சலம் வழியாக மற்றொரு சிறப்பு ரயில் நாளை செப்டம்பர் 11ம்தேதி நெல்லையில் இருந்து சென்னைக்கு (06704) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை வியாழக்கிழமை இரவு 9.15 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி மறுநாள் காலை 9 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
- மறுமார்க்கத்தில் 12ம்தேதி வெள்ளிக்கிழமை, எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் (06703) இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு 9.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 9.45 மணிக்கு நெல்லை வந்தடையும்.
- இந்த சிறப்பு ரயில், வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக எழும்பூர் சென்றடையும். நெல்லை-எழும்பூர் ரயில் மாம்பலத்திலும் நின்று செல்லும்.
- இந்த இரு சிறப்பு ரயில்களுக்குமான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications