தீபாவளிக்கு 6 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 6 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக ஏற்கனவே 6 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால், அந்த ரயில்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் அதிக ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, அக்டோபர் 31 ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் அதே நாளில் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.
அதேபோல் நவம்பர் 1 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்தும், சென்ட்ரலில் இருந்தும் திருநெல்வேலிக்கு தலா ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூருக்கு நவம்பர் 4 ஆம் தேதியும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதேபோன்று கோவை, சென்னை சென்ட்ரல் இடையே நவம்பர் 1 மற்றும் 4 ஆம் தேதிகளில் ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கத்தில் நவம்பர் 1 ஆம் தேதி கோவைக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை அக்டோபர் 24ம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications