அங்கிட்டு கொட்டித் தீர்த்த மழை இங்கிட்டு பெய்யக் கூடாதா சாமிகளா... ஏங்கும் 'உள்மாவட்டங்கள்'
திண்டுக்கல்: 40 மணிநேரம் இடைவிடாத மழை... வெள்ளக்காடாகி மூழ்கிய சென்னை.. அத்தனை டி.எம்.சி. நீரும் கடலில் கலக்கிறது.. இந்த கதிகலங்க வைக்கும் செய்திகளை காட்சிகளை படிக்கும் கேட்கும் பார்க்கும் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட "உள்மாவட்ட" விவசாயிகள் ஏக்கம்தான் "அங்கிட்டு கொட்டித் தீர்க்கும் மழை இங்கிட்டு பெய்யக் கூடாதா சாமி.."

சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கடந்த பல வாரங்களாக வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது... ஆந்திராவில் அடைமழை பெய்து அணைகள் நிரம்ப அந்த நீரும் திறந்துவிட அத்தனை ஏரிகளும் குளங்களும் கால்வாய்களும் நிரம்பி ஆறுகள் கொள்ளமுடியாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடி கடலில் கலந்து கொண்டிருக்கின்றன..

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் குடியேறி இப்போது தத்தளித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலானோர் சாண் வயிற்று பிழைப்புக்காக சென்னைக்குள் தஞ்சம் புகுந்து நாங்களும் நிமிர்ந்து நிற்கிறோம் என நெஞ்சை நிமர்த்த புறநகர்களில் வீடுகளை கட்டிப் போட்டு ஆசுவாசமாய் அமர்ந்த தென்மாவட்ட ஜீவன்கள்தான்... வம்பாடு கட்டிய வீடெல்லாம் வெள்ளம் வீம்புக்கு இழுத்துப் போன கதையாகிப் போய்விட்டது...

அதே நேரத்தில் கொட்டும் மழையில் வடதமிழகம் தத்தளிக்க தென் தமிழகமோ வழக்கமான பருவமழைக்காக இன்னமும் காத்துக் கிடக்கின்றன... ஆறுகளில் சொல்லும்படியாக மழை நீர் பாதத்தைக் கூட நனைக்காத அளவுக்கு பட்டும் படாமல் அவ்வப்போது வரும்... ஆம் "வரும்.. ஆனால் வராது" என்கிற அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறது..

அணைகள் நிரம்ப அதன் உபரி நீரால் தாகம் தணித்துக் கொண்டிருக்கின்றன கால்வாய்களும் கண்மாய்களும்.. இத்தனைக்கும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களைப் போல பேராக்கிரமிப்புகள் இல்லாத வானிலை மைய அகராதிப்படியான உள்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் போன்றவற்றில் மழை பெய்ததாமே? எங்க ஊரில் காணோம்... என்கிற ஏக்க மூச்சுகள்தான் பேருந்துகளிலும் சந்தைகளிலும்..

திண்டுக்கல் நகரத்தில் சில நேரத்தில் கனமழை கொட்டும்.. ஆனால் நகரை விட்டு வெளியே வந்து 2 கி.மீ பார்த்தால் ஏதோ அதிசயம் நிகழ்ந்தது போல சொட்டு மழையும் அந்த பகுதியில்வந்திருக்காது... பேருந்துகளில் ஏறும் போது மழை இருக்காது.. நடுவில் ஒரு ஊரில் ஊற்றிக் கொட்டும்... அடுத்த ஊரில் சொட்டு மழையும் இருக்காது.. இறங்கும் இடத்தில் வெயில் மண்டையை பிளக்கும்.. இந்த வினோத பருவநிலைதான் இங்கே எல்லாம்..

அப்படியே கனமழை கொட்டினாலும் பராமரிக்கப்படாத கால்வாய்களானாலும் ஓடைகளானாலும் வெள்ள நீரை வாங்கிக் கொண்டு ஏதோ ஒரு குளத்தில் கொண்டு சேர்த்து அந்த குளம் வழிந்து இன்னொரு வாய்க்காலில் வழிந்தோடி மற்றொரு குளத்தை நிரப்பிவிடும்..அதுவும் வெளியேறி இன்னொரு குளம்.. என முன்னோர் விட்டுச் சென்ற அந்த நீர்வழித் தடம் செத்துப் போகாமல் இருப்பதால் இத்தனை பேரவலம் வரப்போவது இல்லை..
பெருமழை வெள்ளம் ஏற்பட்டு நிலத்தடி நீர் பெருகி வானம் பார்த்த கிணறுகள் நீர் சுரந்து பால்வார்க்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் இந்த பகுதி விவசாயிகள்..

அந்தமானில் தாழ்வழுத்தம் என்றால் நமக்கு மழை வந்துவிடும்... இன்னும் ரெண்டு நாளில் வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் இது போன்ற உள்மாவட்ட மக்கள்...
வருணனின் கருணை கிடைத்துவிடுமா?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications