கேரளாவில் மட்டும்தானா.. இன்னும் 2 நாளில் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை… வானிலை மையம் அறிவிப்பு
கேரளத்தில் இன்று தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் இன்னம் 2 நாளில் தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: இன்னும் 2 நாளில் தென் தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். அதைதொடர்ந்து இந்த மழை தமிழகத்தின் தென் பகுதிகளிலும் பெய்ய தொடங்கும்.
ஆனால் இந்த முறை மே மாதம் 30ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப இன்று கேரளாவில் மழை பொழியத் தொடங்கிவிட்டது.

தொடங்கியது தென்மேற்கு பருவமழை
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த இரு தினங்களாக கேரளாவில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்திலும் பருவமழை
அடுத்த 2 அல்லது 3 தினங்களில் தென்மேற்கு பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திலும் பருவமழை தொடங்கிவிடும்.

எங்கு எவ்வளவு மழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சிவகங்கை மற்றும் குளச்சலில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 செ.மீ மழையும், தக்கலை, மயிலாடுதுறையில் 5 செ.மீ மழையும், திருவாரூர், நாகர்கோயிலில் 4 செ.மீ. மழையும், கமுதி, காரைக்ககுடி, பேச்சுப்பாறை ஆகிய பகுதிகளில் 3. செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் மிகக் குறைவாக 2.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இன்று மழை வருமா?
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதனையடுத்து உள் மாவட்டப் பகுதிகளில் பூமி குளிரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications