அப்பல்லோ முன்பு பொங்கல் வைத்து, தீபம் ஏற்றி படையலிட்ட அதிமுக மகளிர்!
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் விரைவில் குணம் அடைய வேண்டி அதிமுக மகளிர் அணியினர் இன்று அப்போலோ மருத்துவமனை வாசல் முன்பு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி அதிமுக மகளிர் அணியினர் இன்று அப்போலோ மருத்துவமனை முன்பு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர்.
கிட்டத்தட்ட ஒன்னறை மாதங்களாக அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான பூஜைகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக சிறப்பு யாகங்கள், பால் குடம் எடுத்தல், கோமாதா பூஜை செய்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என்று பல்வேறு விதமான பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், அப்போலோ மருத்துவமனையே ஒரு கோவில் போல் ஆகியவிட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் விரைவில் குணம் அடைய வேண்டி அப்போலோ மருத்துவமனை வாயிலில் நாள்தோறும் ஒவ்வொரு பூஜையை அதிமுகவினர் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று மகளிர் அணியினர் ஒன்று கூடி, அப்போலோ வாசலில் பொங்கல் வைத்தனர், பின்னர் தீபம் ஏற்றி படையலிட்டு கடவுளை வழிபட்டனர். அப்போது தங்களது தலைவரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

இந்த வழிபாட்டின் போது அப்போலோ மருத்துவமனை வாசல் முன்பு அதிமுக பெண் தொண்டர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications