பொங்கல் பண்டிகை: நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு !
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னை எழும்பூரிலிருந்து வரும் 13 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06175) அன்று இரவு 9 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். இதேபோல கோயம்புத்தூரிலிருந்து 14 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07176) மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், சின்ன சேலம், ஆத்தூர், சேலம் டவுண், சேலம் சந்திப்பு, சங்ககிரி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோயம்புத்தூர் வடக்கு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவையிலிருந்து வரும் ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும் நிற்கும்.
அதேபோல் சென்னை எழும்பூரிலிருந்து வரும் 13 ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06177) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக தெற்கு ரெயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 16-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். சென்ட்ரலில் இருந்து விஜயநகரத்திற்கு 14-ம்தேதி மாலை 7 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications