புத்தாண்டு, பொங்கலுக்காக சிறப்பு ரயில்கள்.. தென்னக ரயில்வே அறிவிப்பு
புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் சமயங்களில் ரயில்களில் பேருந்துகளில் நிறைய கூட்டம் இருக்கும். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

இந்த முறை அதேபோல் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில்கள் சிறப்பு கட்டணத்தில் இயங்கும்.
அதன்படி மதுரை - செங்கல்பட்டு சிறப்பு ரயில், டிச.29, ஜன.1, 5, 15ல் மாலை 3.55 மணிக்கு தஞ்சை - கடலூர் மார்க்கத்தில் இயங்கும். மேலும் செங்கல்பட்டு - மதுரை சிறப்பு ரயில், டிச.30, ஜன.2, 6, 16ல் மாலை 5.20 மணிக்கு இயங்கும்.












Click it and Unblock the Notifications