பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை - திருச்சி இடையே கோடை கால சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை-திருச்சி இடையே கோடை கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்டிரல்-ஆமதாபாத் இடையே சிறப்பு கட்டண ரயில் (வண்டிஎண்:06045). ஏப்ரல் மாதம் 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு ஆமதாபாத்தை சென்றடையும்.

Special trains between Trichy and chennai for summer season

சென்னை எழும்பூர்-திருச்சி இடையே சிறப்பு கட்டண ரயில் (06047). ஏப்ரல் மாதம் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் மாலை 6.30 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

திருச்சி-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு கட்டண ரெயில் (06048). ஏப்ரல் மாதம் 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+