சென்னையில் இருந்து மதுரை, கோவைக்கு பகல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை : கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து மதுரை, கோவைக்கு பகல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
*மதுரையில் இருந்து ஜூலை 22 மற்றும் 29 தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) காலை 10 மணிக்கு புறப்படும் மதுரை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் , அதே நாட்களில் மாலை 6.50 மணிக்கு சென்னையை வந்தடையும்.

*மறுமார்க்கமாக சென்னையில் இருந்து 25 மற்றும் ஆகஸ்டு 1-ந்தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) காலை 6.15 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-மதுரை சிறப்பு ரயில் , அதேநாட்களில் பிற்பகல் 3 மணிக்கு மதுரையை சென்றடையும்.
*இந்த சிறப்பு ரயில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
*கோவையில் இருந்து வருகிற 22 மற்றும் 29 தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) காலை 11 மணிக்கு புறப்படும் கோவை-சென்னை சென்டிரல் சிறப்பு ரயில், இரவு 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
*மறுமார்க்கமாக சென்னையில் இருந்து 25 மற்றும் ஆகஸ்டு 1ம்தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) காலை 9.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-கோவை சிறப்பு ரயில் , அதேநாட்களில் மாலை 6 மணிக்கு கோவையை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications