கச்சதீவு அருகே மீன்பிடித்த 21 தமிழக மீனவர்கள் கைது - விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
கச்சத்தீவு அருகே 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. சில மீனவர்கள் உயிரிழந்துள்ளனர் பல மீனவர்கள் இலங்கை சிறையில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். படகுகளை இழந்து பலர் தவித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் நெடுந்தீவுக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்களின் படகுகள், வலைகளையும் இலங்கைக் கடற்படையில் சேதப்படுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 21 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த இலங்கைக் கடற்படையினர் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications