இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்: 28 தமிழக மீனவர்கள் கைது
ராமேஸ்வரம்: எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை, பாம்பன் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி தங்கள் பகுதிக்கு வந்ததாகக் கூறினர்.

இதையடுத்து அவர்கள் தமிழக மீனவர்கள் 28 பேரை கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் அவர்களின் ஒரு விசைப்படகும், 2 நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். முன்னதாக மார்ச் 3ம் தேதி 8 மீனவர்களும், 6ம் தேதி 29 பேரும், 10ம் தேதி 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களை தாக்குவது என்று இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் பலனில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications