இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்- 4 புதுக்கோட்டை மீனவர்களை சிறை பிடித்தது!
புதுகை: புதுகை மாவட்ட மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை மீண்டும் சிறை பிடித்துச் சென்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 241 விசைப்படகுகளில் 900 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் அவரது மகன் ஷியாம், ராசு மகன் சிவக்குமார், ஏர்வாடியை சேர்ந்த காஜா ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை னர் விசைப்படகை சுற்றி வளைத்ததோடு, எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 4 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேரையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 18 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications