இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாளை திருப்பதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாளை திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாளை திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று சிறப்பு விமானத்தில் மாலை 4.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.45 மணிக்கு திருப்பதி செல்கிறார்.

 Sri Lankan PM to visit Tirumala temple on Dec 22

திருப்பதியில் இருந்து கார் மூலம் திருமலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகை சென்று இரவு தங்கும் பிரதமர் ரணில் விக்ரசிங்கே 22 ம் தேதி காலை ஏழுமலையானை தரிசிக்கிறார். தரிசனம் முடிந்து அன்றைய தினமே அவர் இலங்கை திரும்புகிறார்.

ரணில் விக்ரமசிங்கே வருகையையொட்டி திருப்பதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி போலீசாருடன் இலங்கை பிரதமர் அலுவலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

ரணில் விக்ரமசிங்கே கடந்த அக்டோபர் மாதம் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார். கடந்த ஆண்டு கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+