இலங்கை அதிபர் சிறிசேனா 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை
டெல்லி: இலங்கை அதிபர் சிறிசேனா 2 நாட்கள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசுகிறார்.
இங்கிலாந்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசுகிறார். அதன் பிறகு சிறிசேனாவுக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்.

இதைத்தொடர்ந்து நாளை மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினிக்கு செல்லும் சிறிசேனா, மகா கும்பமேளா நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். சாஞ்சி நகருக்கு சென்று உலக புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியை பார்வையிடுகிறார்.
இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்காரிகா தர்மபாலா சிலையை திறந்து வைக்கிறார். அவரது வருகை, இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்கின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் வருகை தரும் சம்பந்தன், கும்பமேளா நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இலங்கை அதிபரின் வருகையை முன்னிட்டு மத்தியப்பிரதேச மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications