எம்.கே. நாராயணனை செருப்பால் அடித்த பிரபாகரன் இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர்!
சென்னை: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சென்னை நிகழ்ச்சி ஒன்றில் செருப்பால் அடித்ததால் கைது செய்யப்பட்ட பிரபாகரன், இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர் என தெரியவந்துள்ளது.
சென்னையில் ஈழ அகதிகள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள எம்.கே. நாராயணன் நேற்று வருகை தந்திருந்தார்.

இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் நாராயணனுக்கு கை கொடுக்க நெருங்கிச் சென்று வலது கையால் செருப்பை எடுத்து, இலங்கை படுகொலைக்கு காரணமே நீதான் என கூறியபடியே கழுத்து, முகம், தலை என பல இடங்களில் எம்.கே.நாராயணனை சரமாரியாக அவர் அடித்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நாராயணனை செருப்பால் அடித்த பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
பிரபாகரனின் தந்தை மெய்யப்பன், இலங்கை மலையகப் பகுதியில் வசித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணங்கோட்டை இவரது சொந்த ஊர்.
பிரபாகரன் சிறுவயது முதலே தமிழகத்தில் உறவினர்களுடன்தான் வசித்து வருகிறார். தமிழகத்தில் ஈழத் தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு சென்று வருபவர்.
சென்னை கோயம்பேட்டில் பிரபாகரன் அறை எடுத்து தங்கியிருந்துதான் இந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். கைது செய்யப்பட்ட பிரபாகரன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கோயம்பேட்டில் பிரபாகரன் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்திய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications