ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதி ஜனவரியில் வெளியீடு – தேர்தல் ஆணையர் சம்பத் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான தேதி பற்றிய அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் தலைமை தேர்தல் ஆணையரான சம்பத்.

அப்பேட்டியில், "ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு மார்ச் மாதம் வரை அவகாசம் இருப்பதால், ஜனவரியில் தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே பதிவு செய்த வாக்காளர்களுக்கான வண்ண அடையாள அட்டைகள் தயார் நிலையில் உள்ளன என்றும், புதியதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கும் வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications