இலங்கை அமைச்சர் கருத்தால் பேச்சுவார்த்தைக்கு பின்னடைவு: ஜி.கே.வாசன்
சென்னை: இலங்கை அமைச்சர் ரஜிதாவின் கருத்து மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராமின் வெண்கல சிலையை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். சிலையை திறந்து வைத்து ஜி.கே.வாசன் பேசியபோது, " இந்திய தேசிய விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற ஜெகஜீவன்ராம், மத்திய ஆட்சியிலும் துணை பிரதமராக இருந்து நாட்டுக்கு பெருமை சேர்ந்தார். அவரது சிலையை திறந்து வைப்பது எனக்கு பெருமை. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜவகர்லால் தேசிய நகர்புற திட்டத்துக்கு 45 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 300 கோடியும் மழை நீர் வடிகால் அமைக்க 1,420 கோடி ரூபாயும், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ. 700 கோடியும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
குடிசைகளை அகற்றி கான்கிரீட் வீடுகள் கட்ட மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அதிக நிதி வழங்கியது. தொழிலாளர் தேர்வு நிதி ஆணையத்துக்கு ரூ. 666.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலித் மாணவர்களுக்கு ரூ.1,278 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுக 3-ம் பிரிவு ஊழியர்களுக்கு ரூ.120 கோடி நிலுவை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 7 ஆயிரத்து 143 பேர் பயன் பெறுவார்கள். 1.1.2002 முதல் கணக்கிட்டு வழங்கப்படும். ஒரு ஊழியருக்கு பாக்கித் தொகையையும் சேர்த்து ரு. 3 லட்சத்து 25 ஆயிரம் கிடைக்கும்.
இலங்கை அமைச்சர் ரஜிதாவின் கருத்து மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தை மூலம் மீனவர்கள் பிரச்னையை தீர்க்க முடியாது என கூறுவது மீனவர் நலனுக்கு எதிரானது. வரும் 20ஆம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்பே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்", இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications