கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை கற்கள், பாட்டில்கள் கொண்டு விரட்டியடித்த இலங்கை கடற்படை
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சுமார் 1000 பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.
ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப்படகுகளில் 1000 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளில் வந்து தமிழக மீனவர்கள் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக மீனவர்கள் கரை திரும்பினர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் மீன்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நஷ்டமுடன் கரை திரும்பிவிட்டோம். ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 60-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications