ஸ்ரீரங்கம் கோவில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் முதல்வராக பதவியேற்றார். ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் ஜெயலலிதா தனது முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இத்தொகுதிக்கு மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரயில் நிலைய அதிகாரிக்கு இன்று ஒரு மர்ம கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடைத்தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications