“பத்திரிகை” துறையில் சாதிக்க ஆசையா? – எஸ்.ஆர்.எம்மின் கணினித் தமிழ் பயிற்சி உங்களுக்குத்தான்!
சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் கணினித்தமிழ் அடிப்படையும், பயன்பாடும் என்னும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது.
கணினியின் அடிப்படையையும், செயல்பாட்டையும் தெரிந்துகொண்டு அனைவரும் கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும், ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும், இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகள் பெறமுடியும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் விடுமுறையில் நடைபெற உள்ளது.
பணி ஓய்வு பெற்றவர்களும் இல்லத்தரசிகளும் பங்குபெறலாம். வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை 20 நாட்கள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை http://www.srmuniv.ac.in எனும் இணையதளத்திலும் தமிழ்ப்பேராய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை நகல் எடுத்தும் பயன்படுத்தலாம்.
பயிற்சிக் கட்டணம் ரூபாய் 1000த்திற்கான வரைவோலையை "SRM TAMIL PERAYAM" என்னும் பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் 25.04.2015, சனிக்கிழமை ஆகும்.
மேலும் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications