தூத்துக்குடி மாவட்டம் 2வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு போனது!
தூத்துக்குடி: பத்தாம் வகுப்பில் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் 2வது இடத்திலிருந்து எட்டாவது இடத்துதுக்குப் போய் விட்டது.
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வினை 12,853 மாணவர்களும் 12,603 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 30பேர் மாற்று திறனாளிகள்.

இன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்தில் அமைந்துள்ள அனிதாகுமரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சந்தியா என்ற மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருடைய சொந்த ஊர் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியபட்டிணம் இவருடைய தந்தை பெயர் பரமசிவம் இவருடைய தாயார் காயாமொழியில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
மேலும் தண்டுப்பத்து அனிதாகுமரன் பள்ளியை சேர்ந்த 2மாணவர்கள் தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும் 3வது இடத்தை 4பேரும் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அளவில் முதலிடத்தை சந்தியாவும், 498மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை 5மாணவர்களும் 497 மதிப்பெண்களை பெற்று 14மாணவ மாணவிகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 25456மாணவ மாணவிகளில் 23489மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 94.22 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற சதவீதம் 95.42 சதவீதமாகும். கடந்த ஆண்டினை விட தற்போது தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கடந்த ஆண்டு தமிழக அளவில் 95.42சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் இரண்டாவது இடத்தைப்பிடித்தது. இந்த ஆண்டு 94.22சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 8வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மாணவ, மாணவியர்களை பொறுத்தவரை அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் கடந்த ஆண்டை காட்டிலும் சராசரியை விட அதிகரித்துள்ளது. இருந்தபோதும் பெரும்பாலான மாணவ, மாணவியர்கள் தமிழ் பாடங்களில் கூட தோல்வி அடைந்து தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு வழிவகுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications