முகநூலில் தொடர்பு கொண்ட பள்ளி மாணவி… நேரில் வாழ்த்திய கருணாநிதி
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாம் மாணவியை நேரில் வரவழைத்து வாழ்த்தியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. சந்திக்க அனுமதி கேட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பு கொண்டதற்கு உடனடியாக பதிலளித்து மாணவியை சந்தித்துள்ளார் கருணாநிதி.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கைகள், கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை வெளியிட்டு வருகிறார். உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகின்றன. அந்த முகநூலில் உலகின் பல்வேறு முனைகளிலிருந்தும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில், நேற்று (28-5-2015) மாலை, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்த - கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகரத்தைச் சேர்ந்த கிரின் வேலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த செல்வி.ஹரிணி, தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்பதிவினை பார்த்த கருணாநிதி உடனடியாக அனுமதி தந்தார்.
மாணவி செல்வி ஹரிணி உடனடியாக ஓசூரிலிருந்து சென்னைக்கு வந்து இன்று (28-5-2015) மாலை, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவி ஹரிணியின் பெற்றோர் மற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் இணையதள இயக்குநர்கள் என்.நவீன், எஸ்.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications