தமிழக “கோயபல்ஸ்” ஜெயலலிதாவிற்கு நோபல் பரிசே கொடுக்கலாம் - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததாக பேசியுள்ள ஜெயலலிதாவிற்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என்று சாடியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
இதுகுறித்து பிரச்சாரத்தில் பேசிய அவர், "உள்ளாட்சி அமைப்புகளில் நான்தான் 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தேன்", என்று ஒரு மிகப்பெரிய பொய்யை பேசியிருக்கிறார். அப்பட்டமான பொய்களை அழுத்தம் திருத்தமாக சொல்வதற்காக ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதாவிற்குதான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவர் 2016 ஆம் ஆண்டின் புதிய "கோயாபல்ஸ்" என்றே கூட சொல்ல முடியும். அந்த அளவிற்கு தேர்தல் பிரச்சாரங்களில் தேடித் தேடி பொய் பேசி வருகிறார்.

இன்று தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்று கூட சொல்ல முடியாது, அது மருத்துவமனையில் ஐ.சி.யு வார்டில் படுத்துக் கொண்டிருந்தாலும் கூட பரவாயில்லை, கோமா நிலையில் உள்ளது. ஆகவே இந்த அரசு மீள வேண்டுமானால் திமுக கூட்டணி வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்கு சென்றாக வேண்டும் என்பதை அனைவரும் மனதில் பதிய வைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை எடுத்து வைக்கவே நான் இங்கு உங்களை நாடி வந்திருக்கிறேன்.
ஒரு ஆட்சி முடிந்து, வேறு ஆட்சி வந்தால் அப்போது அமைச்சர்களாக இருந்தவர்களை முன்னாள் அமைச்சர் என்போம். ஆனால் இந்த 5 ஆண்டுகளில் ஏறக்குறை 30 க்கும் மேற்பட்டவர்கள் "முன்னாள்" ஆக்கப்பட்டார்கள். 24 முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்த ஆட்சியின் நிர்வாகம் எந்தளவிற்கு சீர்கெட்டுப் போயிருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். விழுப்புரம் தொகுதியில் இருந்தவர் கூட முன்னாள் ஆக்கப்பட்டவர். அதற்கு என்ன காரணம் என்று செய்திகள் வந்தன. நான் ஜெயலலிதா போல எதையும் உளர மாட்டேன். ஆதாரத்தோடு, புள்ளி விவரத்தோடுதான் பேசுவேன். காரணம் நான் கலைஞரின் மகன் அல்லவா ?
உள்ளாட்சி அமைப்புகளில் நான்தான் 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தேன்", என்று ஒரு மிகப்பெரிய பொய்யை பேசியிருக்கிறார். அப்பட்டமான பொய்களை அழுத்தம் திருத்தமாக சொல்வதற்காக ஒரு "நோபல் பரிசு" கொடுக்க வேண்டும் என்றால் அது தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதாவிற்குதான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவர் 2016 ஆம் ஆண்டின் புதிய "கோயாபல்ஸ்" என்றே கூட சொல்ல முடியும். அந்த அளவிற்கு தேர்தல் பிரச்சாரங்களில் தேடித் தேடி பொய் பேசி வருகிறார். எனவே, திமுகவிற்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்" என்று பேசினார் ஸ்டாலின்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications