தலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுவிப்பு!
முதல்வர் பதவி விலக கோரி தலைமை செயலகம் அருகே ஸ்டாலின் உள்ளிட்டோர் மறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: முதல்வர் பதவி விலக கோரியும் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரியும் தலைமை செயலகம் அருகே மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுகவினர் புறக்கணித்தனர்.
இதையடுத்து முதல்வர் அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

முதல்வர் விலகக் கோரி
அப்போது 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிகிகை விடுக்கப்பட்டது.
மேலும் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

குண்டுக்கட்டாக தூக்கி
இதையடுத்து அவை காவலர்கள் ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதையடுத்து தலைமை செயலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஸ்டாலினும் மறியல் போராட்டம் நடத்தினார்.

ஆயிரக்கணக்கில் திமுகவினர்
பின்னர் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீஸார் மற்ற திமுக தலைவர்களையும் கைது செய்தனர். ஆயிரக்கணக்கானோர் தலைமை செயலகம் முன்பு திரளுவதால் அங்கு பதற்றம் நீடித்துள்ளது.

வேனை மறித்துப் போராட்டம்
ஸ்டாலின் ஏற்றப்பட்ட வேனை நகர விடாமல் தடுக்கும் வகையில் திமுகவினர் சாலை மறியல் செய்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸார் பெரும் திணறளுக்குள்ளானார்கள்.

ஸ்டாலின் விடுவிப்பு
இதைத்தொடர்ந்து ஸ்டாலின் உட்பட திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்த நிலையில் ராயபுரத்தில் தி.மு.க.வினர் சாலையில் படுத்தபடி மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications