எவ்வளவு பணம் கொடுக்கிறாங்க அதிமுகவிலிருந்து.. வாக்காளர்களிடம் விசாரித்த ஸ்டாலின்
ஏற்காடு: ஏற்காடு இடைத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம்க்களிடம் உங்களுக்கு அதிமுகவினர் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்று கேட்டார். அதற்கு மக்கள் ரூ. 2000 தருவதாக கூறவே, ரூ. 3000 ஆக கேட்டு வாங்குங்கள் என்று கூறினார்.
கிட்டத்தட்ட 23 மலை கிராமங்களில் நேற்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். பெரும் கூட்டத்திற்கு மத்தியில் அவர் பேசினார்.
கூட்டங்களில் அவர் பேசுகையில், ஏற்காடு தொகுதி என்றாலே அது ஏற்காடு மலை தான் அடையாளம். ஆனால் அந்த அம்மையார் இந்த மலைக்கு உங்களை பார்க்க வந்தாரா? வரவில்லை. ஏனெனில் அவர் அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க விரும்பும் சொகுசுவாசி.

இந்த மலையில் குண்டும் குழியுமான சாலையில் வருவாரா? இங்குள்ள சில சாலைகள் கூட கடந்த தி.மு.க ஆட்சியில் போடப்பட்டது தான். அந்த அம்மையாருக்கு ராசியான எண் 9. அதனால் தான் ஒன்பது இடத்தில் பிரசாரம் செய்து விட்டு பறந்துவிட்டார்.
தற்போது வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்கு கொடுத்து வருகிறார்கள் என கேள்விப்பட்டேன். 4ம் தேதி தேர்தல் முடிந்ததும் இங்கு ஏற்காடு தொகுதியிலும் மின்வெட்டு அமுலுக்கு வந்துவிடும். அப்போது இந்த விளக்கு உதவும் என்று தான் அ.தி.மு.க கொடுத்து வருகிறது போல.

சரி, உங்களுக்கு வாக்குக்கு எவ்வளவு பணம் தருகிறார்கள் அ.தி.மு.க வினர்? (2000 ரூபாய் தருகிறார்கள் என்று மக்களிடமிருந்து பதில்). இனிமேல் மூவாயிரம் கேளுங்கள். அது உங்கள் வீட்டு பணம் தான். கொள்ளை கொள்ளையாய் அவர்கள் கொள்ளையடித்ததை தானே தருகிறார்கள். எனவே பணத்தை வாங்கிகொள்ளுங்கள். ஆனால் உங்களது ஓட்டை படித்த உங்கள் மாறனுக்கு குத்துங்கள் என்றார் ஸ்டாலின்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications