பெட்ரோல், டீசல் விலையை தயக்கமின்றி உயர்த்தி வருவது வேதனையளிக்கிறது: ஸ்டாலின்
சென்னை: மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு எவ்வித கவலையுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்வை தயக்கமின்றி உயர்த்தி வருவது வேதனையளிக்கிறது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது:
ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் முதுகெலும்பை முறிக்கும் விதத்தில் தொடர்ந்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.19 பைசாவும், டீசல் விலை 1 ரூபாயும் உயர்த்தியிருப்பது வாகன ஓட்டிகள் முதல் வர்த்தகர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது.

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்த காலகட்டங்களில் எல்லாம் அதற்கான பயனை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் போகாமல் தடுத்து கலால் வரியை விதித்து, மத்திய அரசு தனது வருவாயை மட்டும் பெருக்கிக் கொண்டது. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு எவ்வித கவலையுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்வை தயக்கமின்றி உயர்த்தி வருவது வேதனையளிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனியார் பேருந்து கட்டணங்கள் உயருகின்றன. லாரி வாடகை, சரக்கு கட்டணம் போன்றவை எல்லாம் உயர்வதால், பொதுமக்களின் அன்றாட மற்றும் அத்தியாவசியத் தேவைகளான அனைத்து பொருள்களின் விலையும் விஷம் போல் ஏறுகின்றன.
எனவே, விலைவாசி உயர்வின் தாக்கத்தில் மக்கள் தவித்து வரும் நிலை தொடர்கிறது. முதல்வர் ஜெயலலிதாவும் பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு குறித்து ஒப்புக்காக ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறார்.
தன் கட்சியில் உள்ள 37 எம்.பி.க்கள் மூலம் எந்தவொரு அழுத்தத்தையும் மத்திய அரசுக்குக் கொடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்த முன் வரவில்லை என்பதிலிருந்தே அதிமுக அரசு வழக்கம் போல் மக்கள் நலன் பற்றி சிறிதும் அக்கறை காட்டுவதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ஆகவே, மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், மக்களை பாதிக்கும் இந்த திடீர் திடீர் விலை உயர்வுகள் செய்யும் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா?












Click it and Unblock the Notifications