அந்தோ.. நீட் எனும் கொடுவாளுக்கு இன்னொரு இன்னுயிர் அநியாயமாக பறிபோய்விட்டதே! ஸ்டாலின் இரங்கல்
நீட் எனும் கொடுவாளுக்கு இன்னொரு இன்னுயிர் அநியாயமாக பறிபோய்விட்டதே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நீட் எனும் கொடுவாளுக்கு இன்னொரு இன்னுயிர் அநியாயமாக பறிபோய்விட்டதே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்றிருந்த பிரதீபா, தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் அரசு கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக கடந்த ஓராண்டாக காத்திருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார்.
இதில் வெறும் 39 மதிப்பெண்களே பெற்ற நிலையில் மனமுடைந்த பிரதீபா எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்ட கொடுஞ்செய்தி இதயத்தை நொறுக்குகிறது! மீளாத் துயரில் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
அந்தோ..#NEET எனும் கொடுவாளுக்கு இன்னொரு இன்னுயிர் அநியாயமாக பறிபோய்விட்டதே! 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்ட கொடுஞ்செய்தி இதயத்தை நொறுக்குகிறது! மீளாத் துயரில் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! pic.twitter.com/HE4AUNsPOM
— M.K.Stalin (@mkstalin) June 5, 2018
ஏற்கனவே அரியலூர் அனிதாவை இழந்தோம். இப்போது பெரவளூர் பிரதீபாவை இழந்து நிற்கிறோம். நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலுக்கு செவி சாய்க்காத மத்திய,மாநில அரசுகளின் வஞ்சகத்தை வன்மையாக கண்டிப்பதோடு இந்த உயிர்ப்பலிக்கு இரண்டு அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும்! இவ்வாறு ஸ்டாலின் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரியலூர் அனிதாவை இழந்தோம்.இப்போது பெரவளூர் பிரதீபாவை இழந்து நிற்கிறோம்.நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலுக்கு செவி சாய்க்காத மத்திய,மாநில அரசுகளின் வஞ்சகத்தை வன்மையாக கண்டிப்பதோடு இந்த உயிர்ப்பலிக்கு இரண்டு அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும்! #NeetKillsPradeeba
— M.K.Stalin (@mkstalin) June 5, 2018
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications