கருணாநிதிக்கு மெரீனாவில் இடம்.. உடைந்து கதறி அழுது நன்றி கூறிய ஸ்டாலின்
சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து முக ஸ்டாலின் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
Recommended Video

சென்னை: மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து முக ஸ்டாலின் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

ஆனந்த கண்ணீர்
இதனை கேட்ட கருணாநிதி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், தயாநிதிமாறன் உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

கதறி அழுத ஸ்டாலின்
ஒருவரையொருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஸ்டாலின் துரைமுருகன் மார்பில் சாய்ந்தபடி கதறி அழுதார். அவரை துரைமுருகன், ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் ஆசுவாசப்படுத்தினர்.

கண்ணீருடன் வணங்கிய ஸ்டாலின்
பின்னர் கண்ணீர்விட்டபடி தொண்டர்களை பார்த்து கைக்கூப்பி வணங்கினார் ஸ்டாலின். தொண்டர்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியில் விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆரவாரம் செய்தனர்.

துயரத்திலும் ஒரு நிம்மதி
கருணாநிதி மறைந்த துக்கத்தில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு பேரிடியாக இருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்டிருப்பது பெருந்துயரத்திலும் ஒரு மகிழ்ச்சி செய்தியாக உள்ளது.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications