திமுகவின் வெற்றியை உறுதி செய்தது ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின்
சென்னை: விளம்பரத்தின் தாக்கத்தை உணர்ந்த ஜெயலலிதா தனது சொந்த தொகுதியிலாவது செல்வாக்கை நிலை நாட்டலாம் என்ற எண்ணத்துடன் இறங்கி வந்திருப்பதே திமுகவின் வெற்றியை உறுதி செய்துள்ளது என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் முகநூலில் பதிவு செய்துள்ளது:
ஆட்சி என்ற பெயரில் 5 ஆண்டு காலமாக ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு நடத்திய காட்சியினையும் அதன் அவலத்தையும் விளம்பரங்கள் வாயிலாகத் தமிழக மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது தி.மு.கழகம். தமிழக மக்களிடம் தி.மு.கவின் இந்த விளம்பரங்கள் சரியாகப் போய்ச் சேர்ந்து, வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.கவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதனை உணர மறுத்தாலும், விளம்பரத்தின் தாக்கத்தை செல்வி.ஜெயலலிதா நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.5 வருஷமா முதல்வரை ஸ்டிக்கரில் பார்த்திருப்பீங்க.. பேனரில் பார்த்திருப்பீங்க.. ஏன் டி.வியில்கூட பார்த்திருப்பீங்க..
ஆனா, நேரிலே பார்த்திருக்கீங்களா? என்ற விளம்பர வாசகம் ஏற்படுத்திய அதிர்வுகளை உணர்ந்துகொண்டதன் விளைவாக, மழை-வெள்ள காலத்திலும் வாட்ஸ்அப் ஆறுதல் மட்டுமே தெரிவித்த ஜெயலலிதா இப்போது தனது ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேரில் சென்று திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
காணொலி காட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதையும், ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதையும் உணர்ந்து, சொந்த தொகுதியிலாவது செல்வாக்கை நிலைநாட்டலாம் என்ற எண்ணத்துடன் ஜெயலலிதா இறங்கி வந்திருப்பதே, தி.மு.கழகத்தின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பதிவுசெய்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications