இலவச பயிற்சி மையத்தில் படித்து அதிக மதிப்பெண்: மாணவ-மாணவிகளுக்கு ஸ்டாலின் கொடுத்த ரொக்கப்பரிசு
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி, மற்றும் டி.என்.பி.எஸ்.சி.யில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற 32 மாணவ மாணவிகளுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 2.25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அளித்து வாழ்த்து கூறினார்.

சென்னை வடபழனியில் அறிஞர் அண்ணா பொதுநல மன்றம் சார்பில் மு.க.ஸ்டாலின் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு மாலை நேரங்களில் இலவசமாக டியூசன் நடத்தப்படுகிறது. இது தவிர டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையமும் செயல்படுகிறது.

இங்கு டியூசன் படித்த 10 வது வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 9 பேர் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். 8 பேர் 400 மதிப்பெண்களும் 9 பேர் 350 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 2 பேர் 300 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றனர். 4 பேர் 250 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இந்த 32 மாணவ-மாணவிகளையும் அண்ணா அறிவாலயத்துக்கு மு.க.ஸ்டாலின் இன்று வரவழைத்து பாராட்டினார். அவர்களில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 9 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 8 பேருக்கு தலா 7,000 ரூபாயும், மற்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் ரொக்கப் பரிசாக மொத்தம் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் வழங்கினார். இதேபோல், இந்த பயிற்சி மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்த சரண்யாவுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கிய ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து கூறினார்.

-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications