ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு.. கொளத்தூர் மக்கள் 500 பேருக்கு குடம் வழங்கிய ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அத்தொகுதி மக்கள் 500 பேருக்கு, தலைக்கு 2 குடம் என ஆயிரம் குடங்களை அவர் வழங்கினார்.

சென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவும் திமுக செயல்தலைவரும் ஆன ஸ்டாலின் இன்று பார்வை மேற்கொண்டார். அப்போது அரிதாஸ் தெருவில் உள்ள தாமரை குளத்தை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

stalin gives rounded vessel for keeping water to 500 people in his constituency

முறையாக குடிநீர் கிடைக்கிறதா, சாக்கடை கழிவுகள், குப்பைகள் அகற்றப்படுகிறதா என மக்களிடம் குறைகளை கேட்டார் ஸ்டாலின். மேலும் அத்தொகுதியைச் சேர்ந்த 500 பேருக்கு 1000 குடங்களையும் ஸ்டாலின் வழங்கினார்.

தற்போது சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்கள் பயனடையும் வகையில் குடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president stalin gives rounded vessel for keeping water to 500 people in his constituency. Each person two vessels given by Staling to the kolathoor constituency people.
Please Wait while comments are loading...