வருகிறது புதிய கூட்டணி... மு.க.ஸ்டாலின் சூசகத் தகவல்!
சென்னை: தமிழகத்தில் வருகிற சட்டசபைத் தேர்தலுக்குப் புதிய கூட்டணி அமையும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், கண்டிப்பாக புதிய கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும்போது அது குறித்து வெளிப்படையாக தெரிய வரும்.

ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக புதிய கூட்டணி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன. நிச்சயம் புதிய கூட்டணி அமையும். தேர்தல் நெருங்கும்போது அதுகுறித்துத் தெரிய வரும் என்றார்.
அழைப்பிதழ் கொடுக்க வந்தார் - வைகோ
வைகோ கூறுகையில், தனது தம்பியின் மகன் திருமணத்திற்கு வருமாறு கோரி அழைப்பிதழ் கொடுக்க மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இது மகிழ்ச்சியான நாள். கடந்த பல வருடமாக நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். நானும், இதர மதிமுக மூத்த தலைவர்களம் திருமணத்தில் கலந்து கொள்வோம் என்றார் வைகோ.
மதிமுகவை உருவாக்கிய பின்னர் தனிப்பட்ட முறையில் நேருக்கு நேர் ஸ்டாலினும், வைகோவும் சந்தித்ததில்லை. இதுதான் முதல் முறையாகும். 1991ம் ஆண்டு மதிமுகவை திமுகவிலிருந்து பிரிந்து வந்து உருவாக்கினார் வைகோ.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications