எத்தனை குட்டிக் கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக வளராது: பொன். ராதா மீது ஸ்டாலின் தாக்கு
எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜகவை வளர செய்வது கடினமே என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பாஜகவை வளரச் செய்ய எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் கடினம்தான் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அரசியலில் முகவரி இல்லாத அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கான சான்றுகள் நிறையவே இருக்கிறது.

பொன்.ராதாகிருஷ்ணன் எவ்வளவு முயற்சித்தாலும் அவரது கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த விரக்தியின் விளிம்பில் நின்றுதான் இப்படி பேசி வருகிறார்.
ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க திமுக பெயரைச் சொல்லும் அவசியம் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டிருக்கிறது. பாஜக ஒரு மேலாதிக்கம் கொண்ட கட்சி. அந்தக் கட்சியிலே இன்றைக்கு பொன். ராதாகிருஷ்ணன் போன்ற ஒருவர் அமைச்சராக வந்துள்ளதற்கும் கூட திராவிட இயக்கம் தான் காரணம் என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்.
தமிழகத்தில் பாஜகவை வளர்க்க நீங்கள் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் அதை வளரச் செய்வது கடினம் தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications