ஸ்டாலின் கனவு உலகத்தில் மிதக்கிறார்.. அவர் எதிர்க்கட்சி தலைவர் என்பதை நினைவுப்படுத்துங்கள்: ஓபிஎஸ்
ஸ்டாலின் கனவு உலகத்தில் மிதக்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஸ்டாலின் கனவு உலகத்தில் மிதக்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ஸ்டாலின் கனவு உலகத்தில் மிதக்கிறார், அவர் எதிர்க்கட்சி தலைவர் என்பதை அவருக்கு நினைவு படுத்துங்கள் என்றார்.
மேலும் ஜல்லிக்கட்டு பிரச்சனையில் சிறப்பாக செயல்பட்டதால் சசிகலா தரப்புக்கு தன்னை பிடிக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சிறப்பாக செயல்பட்டதால் தான் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் டிடிவி தினகரனுக்கு அதிக மறதி உள்ளது என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications