கொடுங்கையூரில் பரிதாபமாக பலியான அக்கா, தங்கை... ஸ்டாலின் இறுதி அஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுமிகளின் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து சிறுமிகளின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகர் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி மழை நீர் தேங்கியுள்ளன. இந்த தேங்கிய மழை நீரில் பராமரிக்கப்படாமல் மின்சார ஒயர்களை அறுந்து விழுந்து அபாயகரமான நிலையில் இருந்துள்ளன. இதனை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத நிலையில் மின்சார ஒயரை மிதித்ததில் பாவனா மற்றும் யுவஸ்ரீ என்ற அக்கா தங்கை தூக்கி வீசப்பட்டனர்.

 Stalin paid tribute to Kodungaiyur girl childs who died yesterday due to eletroution

அறுந்து கிடந்த மின்சார ஒயரில் மின்சாரம் தடைபடாமல் இருந்ததால் 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்து சிறுமிகளின் உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதே போன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் உயிரிழந்த மாணவிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து 2 சிறுமிகளின் உடல்களும் கொடுங்கையூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president M.K.Stalin paid tribute to the kids those who were died at Kodungaiyur due to electrocution and the childs bodies cremated.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற